
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று காலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் வழியில், விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த விக்சித் பாரத் – வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத இயக்கம் (கிராமின்) திட்டப் பணிகளை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.
பணியில் ஈடுபட்டிருந்த மக்களுடன் கலந்துரையாடி, திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். மேலும், அப்பகுதி மக்கள் வைத்த பல்வேறு கோரிக்கைகளையும் கேட்டறிந்து, அவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்று, விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கழகத் தலைவர் ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாபெரும் வெற்றி மாநாடு நடைபெற்ற விக்கிரவாண்டி வி.சாலைக்கு மீண்டும் சென்றது, புஸ்ஸி என். ஆனந்த் அவர்களுக்கு மனதிற்கு நெருக்கமான தருணமாக அமைந்தது.
மக்களின் நலனையும், அவர்களின் கோரிக்கைகளையும் நேரில் கேட்டறிந்து செயல்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் பயணம் தொடர்ந்து முன்னேறும்.