
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் பொதுக்கூட்டத்தில் புஸ்ஸி N. ஆனந்த்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (02.10.2026) வெள்ளிக்கிழமை, மாண்புமிகு தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் திரு. புஸ்ஸி N. ஆனந்த் அவர்கள், புதுச்சேரி ECR சாலையில் அமைந்துள்ள ஜீவா ருக்மணி திருமண மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் திரு. E. விநாயகம் அவர்களை ஆதரித்து, மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் சார்பில் இப்பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில், தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா, காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் திரு. பிரவீன் சக்கரவர்த்தி, புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. V. வைத்தியலிங்கம், புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. V. நாராயணசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், புதுச்சேரி மாநில தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், சமூக ஊடகப் பிரிவு நிர்வாகிகள், தொகுதி மற்றும் அணித் தலைமை நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், மகளிர் நிர்வாகிகள், கழகத் தோழர்கள் மற்றும் தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
