
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வாழ்த்துக்களுடன், நேற்று (19.10.2026) திங்கட்கிழமை, தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு. Bussy Anand MLA அவர்கள், ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை திருநாளை முன்னிட்டு, தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 150 பயனாளிகளுக்கு விலையில்லா குக்கர்கள், பழங்கள், பொறி உள்ளிட்ட பூஜைப் பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்வின் போது, பயனாளிகளுக்கு தனது இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகளையும் Bussy Anand அவர்கள் தெரிவித்துக் கொண்டார்.
பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 150 பயனாளிகளுக்கு பூஜைக்குத் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பங்கேற்றவர்கள்
இந்நிகழ்வில் மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு. ம. விஜய் பாலாஜி அவர்கள், சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு. K. அப்புனு (எ) வேல்முருகன் அவர்கள், பகுதி கழகச் செயலாளர்கள், வட்டக் கழகச் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
