
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (23.10.2026) வெள்ளிக்கிழமை, மாண்புமிகு தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு. Bussy Anand MLA அவர்கள் தலைமையில், நீர்நிலைகளைப் பாதுகாத்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, பசுமையான தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் பல்வேறு நீர்நிலைப் பாதுகாப்பு மற்றும் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம், மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தல்லாகுளம் புதுக்குளம் கண்மாயின் முதற்கட்டப் புனரமைப்புப் பணிகளை அமைச்சர் Bussy Anand அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. A. விஜய் அன்பன் கல்லாணை மற்றும் மதுரை கிளாசிக் ரோட்டரி சங்கம் ஆகியோர் இணைந்து முன்னெடுக்கும் இப்பணிகள், நீர்நிலைகளைப் பாதுகாத்தல், மழைநீரைச் சேமித்தல், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கும்.
நீர்நிலைகளை முறையாகப் பராமரித்து, அவற்றின் நீர்த்தேக்கத் திறனை மேம்படுத்துவதன் மூலம், எதிர்காலத் தலைமுறைகளுக்கான நீர்வளத்தைப் பாதுகாப்பதுடன், மதுரையின் பசுமையான சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் இத்தகைய முன்னெடுப்புகள் உதவும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, “நீர்நிலைகளைப் பாதுகாப்போம்! நிலத்தடி நீரைப் பெருக்குவோம்! பசுமையான மதுரையை உருவாக்குவோம்!” என்ற நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் இம்முயற்சி, நீர்வளப் பாதுகாப்பில் மக்கள் பங்கேற்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.
இந்நிகழ்வில் பங்கேற்றவர்கள்
இந்நிகழ்வில் பல்வேறு மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ரோட்டரி சங்க நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
