
வளவனூரில் ரூ.92 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் திறப்பு – அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் திறந்து வைத்தார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (05.11.2026) வியாழக்கிழமை, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் திரு. புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள், விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தைத் திறந்து வைத்தார்.
அயோத்திதாசர் பண்டிதர் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பொதுநிதியின் கீழ் ரூ.92 லட்சம் மதிப்பீட்டில் இந்தச் சமுதாயக்கூடம் கட்டப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது குடும்ப விழாக்கள் மற்றும் சமூக நிகழ்ச்சிகளை எளிதாக நடத்திடும் வகையில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இச்சமுதாயக்கூடம், அப்பகுதி மக்களின் நீண்டகாலத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
உள்ளாட்சிப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி, பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு இத்திட்டம் மேலும் வலுசேர்க்கும்.
இந்நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு. கே.ஜே. ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., விழுப்புரம் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு. ஆனந்த் குமார் சிங், இ.ஆ.ப., துணை ஆட்சியர் திரு. ஆகாஷ், இ.ஆ.ப. மற்றும் அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
