web analytics
விக்கிரவாண்டி முதல் மாநில மாநாட்டின் நினைவுக் கல்வெட்டை நிறுவிய புஸ்ஸி என். ஆனந்த்
விக்கிரவாண்டி வி சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டு நினைவுக் கல்வெட்டை நிறுவிய Bussy Anand.

விக்கிரவாண்டி முதல் மாநில மாநாட்டின் நினைவுக் கல்வெட்டை புதுப்பித்து நிறுவினார் புஸ்ஸி என். ஆனந்த்

மாண்புமிகு தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில், கடந்த 27.10.2024 அன்று விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடான “வெற்றிக் கொள்கைத் திருவிழா” மிகச் சிறப்பாக நடைபெற்றது.

வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த மாநாட்டின் நினைவாக, விக்கிரவாண்டி வி சாலையில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு, மாநாடு குறித்த விவரங்கள் அடங்கிய நினைவுக் கல்வெட்டு நிறுவப்பட்டிருந்தது.

இந்நிலையில், அக்கொடிக்கம்பத்தில் இருந்த கல்வெட்டு சேதமடைந்துள்ள தகவல் கிடைத்ததும், அதனை உடனடியாகச் சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சருமான திரு. புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள், இன்று (05.11.2026) வியாழக்கிழமை விக்கிரவாண்டி வி சாலைக்கு நேரில் சென்றார்.

அங்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திருவுருவப் படம் பொறிக்கப்பட்ட புதிய நினைவுக் கல்வெட்டினை நிறுவினார். தொடர்ந்து, கழகத் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் விழுப்புரம் தென்மேற்கு மாவட்டச் செயலாளர் திரு. ஏ. வடிவேல், கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. பரணி பாலாஜி, விழுப்புரம் வடகிழக்கு மாவட்டச் செயலாளர் திரு. எஸ். சக்திவேல் மற்றும் கழகத் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டின் வரலாற்றுச் சுவடுகளைப் பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.

Bussy Anand