
முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துக்களுடன், இன்று (27.09.2026) ஞாயிற்றுக்கிழமை, மாண்புமிகு தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த், MLA அவர்கள் முன்னிலையில், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணிக்கு அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் திரு. V. செந்தில் குமார் அவர்கள் தங்களது ஆதரவை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் K.G. அருண்ராஜ் அவர்கள், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. V. சம்பத்குமார் அவர்கள், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்கள், மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலர் திரு. C. விஜயபாஸ்கர் அவர்கள், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், திருப்பூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. P. யுவராஜ் அவர்கள், பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் உடனிருந்தனர்.
மேலும், அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருப்பூர் வடக்கு மாவட்ட திருமுருகன்பூண்டி நகரக் கழகச் செயலாளர் திரு. R. பழனிச்சாமி, திருப்பூர் வடக்கு மாவட்ட 15-வது வார்டு கழகச் செயலாளர் திரு. M. சதீஷ்குமார், திருப்பூர் வடக்கு மாவட்ட 1-வது வார்டு செயலாளர் திரு. R. அருள், திருப்பூர் கிழக்கு மாவட்ட MGR மன்றச் செயலாளர் திரு. A. நிஜாம், தாராபுரம் நகரக் கழகச் செயலாளர் திரு. J. முகமது இலியாஸ், தாராபுரம் நகரக் கழகப் பொருளாளர் திரு. J. சாகுல் அமீது, திருப்பூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் திரு. A. அபுதாஹிர், தாராபுரம் நகரக் கழக சிறுபான்மை அணி தலைவர் திரு. H. சேக் முகமது, தாராபுரம் நகரக் கழக துணைச் செயலாளர் திரு. K. இப்ராஹிம் மற்றும் தாராபுரம் நகர வர்த்தக அணி தலைவர் திரு. பந்தல் ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
