web analytics
சென்னை ஐஐடியில் நடைபெற்ற இந்தியன் செஸ்ட் காங்கிரஸ் 2026 நிகழ்வில் பங்கேற்ற புஸ்ஸி என். ஆனந்த்
சென்னை தரமணியில் உள்ள ஐஐடியில் நடைபெற்ற இந்தியன் செஸ்ட் காங்கிரஸ் 2026 தொடக்க நிகழ்வில் புஸ்ஸி என். ஆனந்த்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துக்களுடன், இன்று 29.08.2026 சனிக்கிழமை, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. புஸ்ஸி என். ஆனந்த், MLA அவர்கள், சென்னை தரமணியில் உள்ள ஐஐடியில் நடைபெற்ற இந்தியன் செஸ்ட் காங்கிரஸ் 2026 தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டார்.

உலகம் முழுவதும் சுவாச நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், நோய் வந்த பிறகு சிகிச்சை அளிப்பதைவிட, நோய் வராமல் தடுப்பதும், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதும் மிகவும் முக்கியம் என அவர் தெரிவித்தார்.

மேலும், புகைப்பிடித்தல் மற்றும் புகையிலைப் பயன்பாட்டைத் தவிர்ப்பதுடன், கிராமப்புறங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சுவாச நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு, மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு பல்வேறு சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், நவீன மருத்துவத்தின் பயன்கள் தமிழ்நாட்டின் கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்தியாவின் முதல் தேசிய மாநாடான இந்தியன் செஸ்ட் காங்கிரஸ் 2026 சிறப்பான வெற்றியைப் பெறவும், புதிய மருத்துவ ஆராய்ச்சிகள் மற்றும் சிகிச்சை முறைகளுக்கு வழிவகுக்கவும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு செயலாளர் திரு. டாக்டர். டேரேஸ் அகமது, இ.ஆ.ப., முன்னாள் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் திரு. டாக்டர். H.V. ஹண்டே, பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

Bussy Anand