web analytics
மதுராந்தகம் தேர்தல் பரப்புரையில் புஸ்ஸி N. ஆனந்த்
மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் புஸ்ஸி N. ஆனந்த்

மாண்புமிகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நேற்று (01.10.2026) வியாழக்கிழமை, மாண்புமிகு தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. புஸ்ஸி N. ஆனந்த் MLA அவர்கள், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் வேட்பாளர் திருமதி. மரகதம் குமரவேல் அவர்களை ஆதரித்து, மதுராந்தகத்தில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரை மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.

தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற தன்மையையும், சமூகநீதியையும் பாதுகாத்து, ஜனநாயக மாண்புகளை நிலைநாட்டும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் ஒருங்கிணைப்பில் அமைந்துள்ள மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் சார்பில் இந்தத் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தப் பொதுக்கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், கழகத் தோழர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Bussy Anand