web analytics
காந்தி ஜெயந்தியையொட்டி மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்திய அமைச்சர் புஸ்ஸி N. ஆனந்த்
காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி சென்னையில் மரியாதை செலுத்திய அமைச்சர் புஸ்ஸி N. ஆனந்த்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இன்று (02.10.2026) வெள்ளிக்கிழமை, உத்தமர் காந்தியடிகளின் 158-வது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. புஸ்ஸி N. ஆனந்த் அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. P. வெங்கடரமணன் அவர்கள், சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. எஸ். மாலதி ஹெலன் அவர்கள் மற்றும் மாண்புமிகு அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.கே. ராம்குமார் அவர்கள் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, SRS சர்வோதயா பள்ளி மாணவிகள் குழுவாக இணைந்து பாடிய காந்தியடிகள் குறித்த பாடல்களை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கேட்டுப் பாராட்டினர்.

மேலும், சர்வோதயா சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரம்பரிய முறையில் கதர் ஆடைகள் நெய்யும் பணியையும் பார்வையிட்டு, அதன் செயல்முறைகளை கேட்டறிந்தனர்.

Bussy Anand