web analytics
அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் தாராபுரம் உப்பாறு பாசன விவசாயிகள் கலந்தாய்வு கூட்டத்தில்
தாராபுரத்தில் நடைபெற்ற உப்பாறு பாசன விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்.

மாண்புமிகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (03.10.2026) சனிக்கிழமை, மாண்புமிகு தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் MLA அவர்கள், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உப்பாறு பாசன விவசாயிகள் சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்திய கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பேசிய மாண்புமிகு அமைச்சர் அவர்கள், இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகள் அனைத்தும் உரிய முறையில் சரி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், மதசார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி சார்பில் தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திருமதி பி. சத்தியபாமா அவர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் K.G. அருண்ராஜ் அவர்கள், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. செ. ராஜேஷ் குமார் அவர்கள், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்கள், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி அவர்கள், புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலர் திரு. C. விஜயபாஸ்கர் அவர்கள், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. உடுமலை K. ராதாகிருஷ்ணன் அவர்கள், திரு. செ. கடம்பூர் ராஜு அவர்கள், பல்வேறு மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Bussy Anand