ஊராட்சி செயலாளர்களின் மூன்று முக்கிய கோரிக்கைகள் – மாநில மாநாட்டில் பங்கேற்றார் அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் கோரிக்கை மாநில மாநாட்டில் அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள் கலந்து கொண்டார். ஊராட்சி செயலாளர்களின் ஓய்வூதியம், மாத ஊதியம் மற்றும் தேர்வுநிலை, சிறப்புநிலை ஊதியம் தொடர்பான மூன்று கோரிக்கைகளும் முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என உறுதியளித்தார்.
