web analytics
ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்.

சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, 14.11.2026 சனிக்கிழமை அன்று, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அய்யன் வள்ளுவர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் முப்பெரும் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் கோரிக்கை மாநில மாநாட்டில் கலந்து கொண்டார்.

இம்மாநாட்டில் ஊராட்சி செயலாளர்களின் பணிச்சூழல், நலன் மற்றும் எதிர்காலப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் மூன்று முக்கியக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

  1. ஊராட்சி செயலாளர்களைத் தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் (TAPS) திட்டத்தில் இணைக்க வேண்டும்.
  2. ஊராட்சி செயலாளர்களுக்கான மாதாந்திர ஊதியத்தை அரசு கருவூலத்தின் மூலம் வழங்க வேண்டும்.
  3. ஊராட்சி செயலாளர்களுக்குத் தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலை ஊதியம் வழங்க வேண்டும்.

இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள், ஊராட்சி செயலாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கே. சுப்பராயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. மு. வீரபாண்டியன், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநிலத் தலைவர் திரு. A. ஜான்போஸ்கோ பிரகாஷ், மாநிலப் பொதுச்செயலாளர் திரு. V. வேல்முருகன், AITUC தேசியச் செயலாளர் திருமதி. வகிதா நிஜாம், TNGEU மாநிலத் தலைவர் திரு. இரா. சத்தியமூர்த்தி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநிலப் பொதுச்செயலாளர் திரு. த. லெனின் மற்றும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Bussy Anand