வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: தியாகராய நகர் தொகுதியில் 3 அவசரகால வாகனங்கள் – அமைச்சர் என். ஆனந்த் அர்ப்பணிப்பு

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியில் மழைநீர் தேக்கம் மற்றும் வடிகால் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில், அமைச்சர் என். ஆனந்த் மூன்று அவசரகாலப் பயன்பாட்டு வாகனங்களைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.
