web analytics
தியாகராய நகர் தொகுதியில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைக்காக அர்ப்பணிக்கப்பட்ட மூன்று அவசரகால வாகனங்கள்
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைக்காக தியாகராய நகர் தொகுதியில் மூன்று அவசரகால வாகனங்கள் அர்ப்பணிப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியில் அவசரகால முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ளும் வகையில், மூன்று அவசரகாலப் பயன்பாட்டு வாகனங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டன.

இன்று (18.10.2026), மாண்புமிகு தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு. என். ஆனந்த் MLA அவர்கள், இந்த அவசரகால வாகனங்களை அர்ப்பணித்தார்.

இந்த வாகனங்களில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதி அலுவலக ஊழியர்கள் தொடர்ந்து பணியில் இருப்பார்கள். தொகுதியில் மழைநீர் தேங்குதல், மழைநீர் வடிகால் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பிற அவசரகாலப் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்தவுடன், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாகச் சென்று தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் மழைநீர் தேக்கத்தைக் கட்டுப்படுத்துதல், வடிகால் தொடர்பான பிரச்சினைகளை விரைந்து சரிசெய்தல் மற்றும் பொதுமக்களின் புகார்களுக்கு உடனடித் தீர்வு காணுதல் ஆகியவற்றில் இந்த அவசரகால வாகனங்கள் முக்கியப் பங்காற்றும்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், மழைக்காலப் பாதிப்புகளைக் குறைப்பதற்கும், அவசரகாலச் சூழ்நிலைகளில் விரைந்து செயல்படுவதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பங்கேற்றவர்கள்

இந்நிகழ்வில் மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு. ம. விஜய் பாலாஜி அவர்கள், சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு. K. அப்புனு (எ) வேல்முருகன் அவர்கள், பகுதி கழகச் செயலாளர்கள் திரு. தர்மா, திரு. மகி, திரு. எழிலரசு, வட்டக் கழகச் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Bussy Anand