web analytics
தாராபுரம் வேங்கிபாளையத்தில் வீடு வீடாக தேர்தல் பரப்புரை மேற்கொண்ட Bussy N. Anand
வேங்கிபாளையம் பகுதியில் வீடு வீடாக தேர்தல் பரப்புரையில் Bussy N. Anand

மாண்புமிகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (29.09.2026) செவ்வாய்க்கிழமை, மாண்புமிகு தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த், MLA அவர்கள், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி சார்பில் தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திருமதி. பி. சத்தியபாமா அவர்களை ஆதரித்து, வேங்கிபாளையம் பகுதியில் வீடு வீடாகச் சென்று மக்களுடன் மக்களாக இணைந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

இந்நிகழ்வில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் K.G. அருண்ராஜ் அவர்கள், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள், புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலர் திரு. C. விஜயபாஸ்கர் அவர்கள், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. உடுமலை K. ராதாகிருஷ்ணன் அவர்கள், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. செ. கடம்பூர் ராஜு அவர்கள், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் உடன் இருந்தனர்.

Bussy Anand