web analytics
அலங்கியம் பகுதியில் தாராபுரம் இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்
அலங்கியம் பகுதியில் தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்

மாண்புமிகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (03.10.2026) சனிக்கிழமை, மாண்புமிகு தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. புஸ்ஸி என். ஆனந்த் MLA அவர்கள், மதசார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி சார்பில் தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திருமதி பி. சத்தியபாமா அவர்களை ஆதரித்து அலங்கியம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகளை சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் K.G. அருண்ராஜ் அவர்கள், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள், மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மற்றும் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. உடுமலை K. ராதாகிருஷ்ணன் அவர்கள், திரு. செ. கடம்பூர் ராஜு அவர்கள், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் உடனிருந்தனர்.

Bussy Anand