web analytics
தமிழக வெற்றிக் கழக வட்டச் செயலாளர் காளிதாஸுக்கு ரூ.40,000 மருத்துவ உதவி வழங்கிய அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்
வட்டச் செயலாளர் P. காளிதாஸின் அறுவை சிகிச்சைக்காக தனது சட்டமன்ற உறுப்பினர் ஊதியத்திலிருந்து ரூ.40,000 வழங்கிய அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்.

சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு. புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள், தமிழக வெற்றிக் கழக சென்னை தெற்கு (வடக்கு) மாவட்ட வட்டச் செயலாளர் திரு. P. காளிதாஸ் அவர்களின் அறுவை சிகிச்சை மருத்துவச் செலவிற்காக தனது சட்டமன்ற உறுப்பினர் ஊதியத்திலிருந்து ரூ.40,000 நிதியுதவியாக வழங்கினார்.

அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்த நிலையில், திரு. P. காளிதாஸ் அவர்களுக்கு மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க நிதியுதவி தேவைப்பட்டது. இதையடுத்து, சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு. K. அப்புனு (எ) வேல்முருகன் அவர்களின் உதவியுடன், அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் அவர்களை நேரில் சந்தித்து மருத்துவ உதவி கோரினார்.

திரு. P. காளிதாஸ் அவர்களின் நிலையை அறிந்த அமைச்சர் அவர்கள், உடனடியாக உதவ முன்வந்து தனது சட்டமன்ற உறுப்பினர் ஊதியத்திலிருந்து ரூ.40,000 தொகையை வழங்கினார். இந்த நிதியுதவி அவரது அறுவை சிகிச்சை மருத்துவச் செலவுகளுக்கு உறுதுணையாக அமைந்தது.

Bussy Anand