
டெல்லியில் நேற்று (16.11.2026) திங்கட்கிழமை நடைபெற்ற சோனியா காந்தி அவர்களின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அப்போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி அவர்கள், கடந்த 22 ஆண்டுகளாகத் தனது இல்லத்தில் பணியாற்றி வரும் பெண் ஒருவரை முதலமைச்சரிடம் அறிமுகப்படுத்தினார். அந்தப் பெண்ணுக்கு முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை என்றும் தெரிவித்தார்.
இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் அவர்கள், அப்பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், அவரிடம் அன்புடன் நலம் விசாரித்தார்.
இந்த நெகிழ்ச்சியான தருணத்தின்போது, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. புஸ்ஸி என். ஆனந்த் அவர்களும், மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்களும் உடனிருந்தனர்.
