web analytics
நேபாள பேரிடரிலிருந்து மீட்கப்பட்ட 21 தமிழ்நாடு சுற்றுலாப் பயணிகளை சென்னை விமான நிலையத்தில் வரவேற்ற அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்
நேபாள பேரிடரிலிருந்து மீட்கப்பட்டு சென்னை வந்தடைந்த 21 தமிழ்நாடு சுற்றுலாப் பயணிகளை அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் வரவேற்றார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, நேற்று 28.08.2026 வெள்ளிக்கிழமை, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. புஸ்ஸி என். ஆனந்த், MLA அவர்கள், நேபாளத்தில் நிகழ்ந்த பேரிடரிலிருந்து மீட்கப்பட்டு சென்னை விமான நிலையம் வந்தடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றார்.

நேபாளத்தில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளின் மூலம் மீட்கப்பட்டு சென்னை திரும்பிய சுற்றுலாப் பயணிகளை அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் நேரில் வரவேற்று, அவர்களின் நலம் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிகழ்வின்போது மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. த. சரத்குமார் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் திரு. எம். விக்னேஷ் அவர்கள், துணைச் செயலாளர் (மரபு) திரு. ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், இ.ஆ.ப. அவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Bussy Anand