web analytics
சென்னை தலைமைச் செயலகத்தில் விவசாயச் சங்கப் பிரதிநிதிகளுடனான கூட்டத்தில் பங்கேற்ற Bussy Anand
விவசாயச் சங்கப் பிரதிநிதிகளுடனான குறைதீர்ப்பு மற்றும் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் Bussy Anand

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இன்று (22.10.2026) வியாழக்கிழமை, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. Bussy Anand MLA அவர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் நடைபெற்ற குறைதீர்ப்பு மற்றும் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

இக்கூட்டத்தில், விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள், அவர்களின் கோரிக்கைகள் மற்றும் வேளாண்மை சார்ந்த முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவசாயச் சங்கப் பிரதிநிதிகளுடன் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.

விவசாயிகளின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்த அமைச்சர் Bussy Anand அவர்கள், அவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள்

இக்கூட்டத்தில் மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. K. A. செங்கோட்டையன் அவர்கள், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. A. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள், மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு. M. விஜய் பாலாஜி அவர்கள், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்கள், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. V. காந்திராஜ் அவர்கள், மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. R. வினோத் அவர்கள், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. C. ரமேஷ் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. க. மாரிமுத்து, டாக்டர் எம். சுதாகர், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.