web analytics
பனகல் பூங்கா பகுதியில் மழைநீர் தேக்கத்தை நேரில் ஆய்வு செய்த Bussy Anand
பனகல் பூங்கா பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய Bussy Anand

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இன்று (21.10.2026) புதன்கிழமை, மாண்புமிகு தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு. Bussy Anand MLA அவர்கள், வடகிழக்குப் பருவமழையின் காரணமாக தியாகராய நகர் தொகுதியில் உள்ள பனகல் பூங்கா பகுதியில் மழைநீர் தேங்கியிருப்பதைத் தொடர்ந்து, அப்பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் மூலம் உடனடியாக வெளியேற்றி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு Bussy Anand அவர்கள் அறிவுறுத்தினார்.

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் பூங்காக்கள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் மழைநீர் தேங்குவதால் ஏற்படும் சிரமங்களைக் குறைப்பதற்கும், மழைநீர் விரைந்து வெளியேறுவதை உறுதி செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பங்கேற்றவர்கள்

இந்நிகழ்வில் சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு. K. அப்புனு (எ) வேல்முருகன் அவர்கள், அரசு அலுவலர்கள், பகுதி கழகச் செயலாளர்கள், வட்டக் கழகச் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் உடனிருந்தனர்.