
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இன்று (23.10.2026) வெள்ளிக்கிழமை, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. Bussy Anand MLA அவர்கள் தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மதுரையில் “வெற்றித் தமிழகம் – தொலைநோக்கு ஆவணம்” செயல்திட்ட முன்னெடுப்பு மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான மூன்றாவது மண்டல மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இம்மாநாட்டில் மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 15 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊரக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், “வெற்றித் தமிழகம் – தொலைநோக்கு ஆவணம்” செயல்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் Bussy Anand அவர்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.
ஊரக வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம், எதிர்காலத் திட்டமிடல் மற்றும் பருவமழைக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றை ஆய்வு செய்வதன் மூலம், தொடர்புடைய பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து இம்மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டது.
