
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துக்களுடன், இன்று (19.11.2026) வியாழக்கிழமை, மாண்புமிகு தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு. புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள், சென்னை அசோக் நகர் 11-வது அவென்யூவில் மாயா நர்சிங் ஹோம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஓர் அங்கமாகத் தொடங்கப்பட்டுள்ள MAYA GERIATRICS & CRITICAL CARE HOSPITAL மருத்துவமனையின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மருத்துவமனையைத் திறந்து வைத்துச் சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். பாலமுருகன், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். தியாகராஜன், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. டி. சண்முகன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு. பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா, தியாகராய நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜெ. கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், மருத்துவமனையின் நிர்வாகிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
