web analytics
பேச்சிப்பாறை அணையின் உலகப் பாரம்பரிய பாசனக் கட்டமைப்பு விருது மற்றும் சான்றிதழை Bussy Anand அவர்களிடம் காண்பிக்கும் நீர்வளத்துறை அதிகாரிகள்
பேச்சிப்பாறை அணைக்கு வழங்கப்பட்ட உலகப் பாரம்பரிய பாசனக் கட்டமைப்பு விருது மற்றும் சான்றிதழை அமைச்சர் Bussy Anand அவர்களிடம் நீர்வளத்துறை அதிகாரிகள் காண்பித்தனர்.

பேச்சிப்பாறை அணைக்கு 2026-ஆம் ஆண்டிற்கான உலகப் பாரம்பரிய பாசனக் கட்டமைப்பு அங்கீகாரம்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துக்களுடன், நேற்று (22.10.2026) வியாழக்கிழமை, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. Bussy Anand MLA அவர்களிடம், கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பேச்சிப்பாறை அணைக்கு 2026-ஆம் ஆண்டிற்கான உலகப் பாரம்பரிய பாசனக் கட்டமைப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டதற்கான விருது மற்றும் சான்றிதழை நீர்வளத்துறை அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிகழ்வில், நீர்வளத்துறை அரசு செயலாளர் திரு. பிரசாந்த் மு. வடநேரே, இ.ஆ.ப., நீர்வளத்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளரும், தலைமைப் பொறியாளருமான (பொது) திரு. எஸ். கோபாலகிருஷ்ணன், மாநில அணைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைமைப் பொறியாளர் திரு. எஸ். ரமேஷ் மற்றும் நாகர்கோவில் கோதையாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் திருமதி ஆ. வசந்தி ஆகியோர் உடனிருந்தனர்.