
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துக்களுடன், இன்று (03.10.2026) சனிக்கிழமை, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. புஸ்ஸி என். ஆனந்த் MLA அவர்கள், கோவை விமான நிலையத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளத்தில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களையும் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களை வரவேற்று, அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும், வித்யா ராம்ராஜ் தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் வாழ்த்தினார்.
