திருச்சி ஜல் ஜீவன் மிஷன் மண்டல மாநாட்டில் தமிழ்நாட்டின் குடிநீர் திட்டங்கள் குறித்து உரையாற்றினார் அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்

திருச்சியில் நடைபெற்ற ஜல் ஜீவன் மிஷன் மண்டல மாநாட்டில் அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டங்கள், ரூ.18,123 கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் 1.15 கோடி ஊரக வீடுகளுக்குக் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து உரையாற்றினார்.
முக்கொம்பு மேலணையில் சேதமடைந்த காவிரி கதவணையை ரூ.126 கோடியில் புனரமைக்க 15 நாட்களுக்குள் அரசாணை பெற அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் அறிவுறுத்தல்

அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள் திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் சேதமடைந்த காவிரி கதவணையை நேரில் ஆய்வு செய்தார். ரூ.126 கோடி மதிப்பீட்டிலான புனரமைப்புப் பணிகளைத் தொடங்க 15 நாட்களுக்குள் அரசாணை பெற நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
