
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நேற்று (19.10.2026) திங்கட்கிழமை, ஆயுத பூஜையை முன்னிட்டு தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. Bussy Anand MLA அவர்கள், தனது அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் சென்னை பசுமை வழிச்சாலையில் மழைநீர் தேங்கியிருப்பதைக் கவனித்தார்.
இதையடுத்து, உடனடியாக அப்பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்ட Bussy Anand அவர்கள், தேங்கியுள்ள மழைநீரை விரைந்து வெளியேற்றி, பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் எவ்வித சிரமமும் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் ஏற்படும் சிரமங்களைக் குறைத்து, போக்குவரத்து தடையின்றி நடைபெறுவதையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அவசியமாகும். அந்த வகையில், மழைநீர் தேக்கத்தை உடனடியாகச் சரிசெய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த ஆய்வின்போது மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு. ம. விஜய் பாலாஜி அவர்கள் உடனிருந்தார்.
