
சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, 13.11.2026 வெள்ளிக்கிழமை அன்று, மாண்புமிகு தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு. புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அசோக் நகர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு கேக் வழங்கி, குழந்தைகள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றை நட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், அப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து மாணவிகளிடையே உரையாற்றிய அமைச்சர் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கும் சிறப்புக் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார். பள்ளி மாணவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதியளித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. A. விஜய் அன்பன் கல்லாணை, சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு. K. அப்புனு (எ) வேல்முருகன், மாவட்ட, பகுதி மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள், சார்பு அணியினர், மகளிர் அணியினர் மற்றும் கழகத் தோழர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
