web analytics
மழவந்தாங்கல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடத்தைத் திறந்து வைத்த அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்
மழவந்தாங்கல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டடத்தைத் திறந்து வைத்த அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்.

விழுப்புரம்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, 05.11.2026 வியாழக்கிழமை அன்று, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செஞ்சி ஊராட்சி ஒன்றியம், மழவந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறைகளைக் கொண்ட கட்டடத்தைத் திறந்து வைத்தார்.

நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் இந்தப் புதிய வகுப்பறைக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மாணவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் தரமான கற்றல் சூழலை உருவாக்கும் நோக்கில் இக்கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கும், சிறந்த கல்விச் சூழலை உருவாக்குவதற்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு. கே.ஜே. ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு. ஆனந்த் குமார் சிங், இ.ஆ.ப., துணை ஆட்சியர் திரு. ஆகாஷ், இ.ஆ.ப., செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. அ. கணேஷ்குமார் மற்றும் அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Bussy Anand