web analytics
சென்னை ECR-ல் நடைபெற்ற பிரவீன் ராஜ் ஐஷ்வர்யா திருமண விழாவில் பங்கேற்ற அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்
சென்னை ECR-ல் நடைபெற்ற பிரவீன் ராஜ் – ஐஷ்வர்யா இல்லத் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்திய அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துக்களுடன், 11.11.2026 புதன்கிழமை அன்று, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் (ECR) நடைபெற்ற பிரவீன் ராஜ் – ஐஷ்வர்யா அவர்களது இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இந்நிகழ்வில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. V. சம்பத்குமார், மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு. M. விஜய் பாலாஜி, மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு. K. தென்னரசு, மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. J. முகமது பர்வேஸ் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற அரசு தலைமை கொறடா திரு. R. சபரிநாதன் ஆகியோரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Bussy Anand