
சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, 13.11.2026 வெள்ளிக்கிழமை அன்று, மாண்புமிகு தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு. புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தியாகராய நகர் தொகுதிக்கு உட்பட்ட 132-வது வட்டம், ரங்கராஜபுரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள மாநகராட்சிப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கேக் மற்றும் சர்க்கரைப் பொங்கல் வழங்கி குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பள்ளி மாணவ, மாணவியர்களுடன் ஒன்றாக அமர்ந்து கலந்துரையாடிய அமைச்சர் அவர்கள், அவர்களின் மகிழ்ச்சியில் பங்கேற்றதுடன், குழந்தைகளின் கல்வி, வளர்ச்சி மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்குத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
தொடர்ந்து, அருகிலுள்ள அங்கன்வாடி மையத்திற்குச் சென்ற அமைச்சர் அவர்கள், அங்கிருந்த மழலைக் குழந்தைகளுக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. A. விஜய் அன்பன் கல்லாணை, மாண்புமிகு மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. D. சண்முகன், சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு. K. அப்புனு (எ) வேல்முருகன், மாவட்ட, பகுதி மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள், சார்பு அணியினர், மகளிர் அணியினர் மற்றும் கழகத் தோழர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
